அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Monday, January 11, 2016

தக்தீரே முப்ரம்

தக்தீரே முப்ரம் (நீங்காத விதி) என்பது குறிப்பிட்ட நிலைமைகளினாலேயே தவிர நீங்குவதில்லை என நான் முன்னரே குறிப்பிட்டேன். தக்தீரே முப்ரம் நீங்குதல் என்றால் என்ன பொருள் என்பதைப் பற்றி இப்போது கூறுகிறேன். தக்தீரே முப்ரம் நீங்குதல் என்றால் அது உண்மையிலேயே முற்றிலுமாக நீங்கிவிடுகிறது என்று பொருளல்ல. மாறாக அதன் நிலை மாறிவிடுகிறது: அது வேறொரு வகையில் மாற்றப்படுகிறது என்பதே அதற்குப் பொருள். இந்த தக்தீர் நுட்பத்திலும் நுட்பமான இரகசியங்களின் அடிப்படையில் இறங்குகிறது. அது மாறி விடுவதால் சிலநேரத்தில் இன்னும் பல சட்டங்களின்மீது அது தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஆகவே இந்த தக்தீர் அல்லாஹ்வின் சிறப்பு ஹிக்மத்தின் அடிப்படையில் முழுவதுமாக நீக்கப்படுவதில்லை.

Friday, January 8, 2016

முன்னறிவிப்புகள் ஏன் நீங்குகின்றன?

நீங்கக் கூடிய முன்னறிவிப்புகள் பல வகையில் உள்ளன.

1. தான் கடந்து செல்லும் நிலைமைகளின் விளைவு பற்றி மனிதனுக்கு அறிவிக்கப்படுகிறது.

அதாவது சாதாரண விதியின் கீழ் என்ன விளைவுகள் ஏற்படவிருக்கின்றனவோ அவற்றை தெரிவித்தல், உதாரணமாக பிளேக் நோய்க் கிருமிகள் இருக்கின்ற ஓரிடத்திற்கு ஒருவர் செல்கிறார். அந்நோய்க் கிருமிகள் தொற்றிக் கொள்ளும் வகையில் அவரது உடலமைப்பு உள்ளது. அதன் தீய விளைவுகளிலிருந்து காத்துக் கொள்ள ஒரு பொருளும் அவருக்கு இல்லாதிருக்கிறது என வைத்துக் கொள்வோம். அப்போது அவருக்கு பிளேக்

Thursday, January 7, 2016

முன்னறிவிப்பும் விதி நீங்குவதும்

நபித்துவத்தின் உண்மைக்கு முன்னறிவிப்புகளுடன் அதிக தொடர்பு உண்டு. மேலும் முன்னறிவிப்புகள் நீங்குவதனால் நபிமார்களின் எதிரிகளும் கூச்சலிடக் கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது. மேலும் முன்னறிவிப்புகள்  என்பது தக்தீர் என்ற விவகாரத்தின் ஒரு கிளையாகும். எனவே தக்தீருக்கும் முன்னறிவிப்புகளுக்கும் என்ன தொடர்பு என்பதையும் நான் எடுத்துக் கூறி விடுகின்றேன்.

முன்னறிவிப்புகள் இரண்டு வகையாக உள்ளன. ஒன்று இறை ஞானத்தை வெளிப்படுத்துவது; இன்னொன்று இறை வல்லமையை வெளிப்படுத்துவது. தக்தீரின் இவ்விரு அம்சங்களையும் புரிந்து கொள்ளாத காரணத்தாலேயே

Sunday, January 3, 2016

விதி மாறுமா?

விதி மாறுமா? என்பதற்கு தற்போது விடையளிக்கிறேன். ஆம் விதி மாறலாம் என்பதே இதற்குரிய சுருக்கமான விடையாகும்.

தக்தீர் என்றால் ‘தீர்ப்பு’ என்று பொருள். மேலும் எவர் தீர்ப்பு வழங்குவாரோ அவரால் அந்த தீர்ப்பை மாற்றவும் முடியும். தீர்ப்பு வழங்கியபின் அதனை மாற்ற முடியாமலிருப்பது பலவீனத்தின் அறிகுறியாகும். அது இறைவனிடத்தில் இருக்க முடியாது.

விதி எவ்வாறு நீங்குகிறது?

Thursday, December 31, 2015

தக்தீர் வெளியாகும் போது காரணிகளை பயன்படுத்துவது ஆகுமானதா இல்லையா?

தக்தீர் (இறை நியதி) வெளிப்படும்போது காரணியைக் கையாள்வதற்கான ஆற்றல் மனிதனுக்கு இருக்குமா இல்லையா? ஆற்றல் இருக்குமென்றால் அந்த காரணிகளை பயன்படுத்துவதற்கான அனுமதி இருக்கிறதா இல்லையா? என்பது குறித்து தற்போது கூறுகிறேன்.

உடல் உறுப்புகளின் மீது வெளிப்படும் தக்தீருக்கு எதிராக காரணிகளைக் கையாளும் ஆற்றல் மனிதனுக்கு இல்லை என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களின் நாவுக்கு ஒரு குறிப்பிட்ட சொற்களை சொல்லும்படியாக கட்டளையிடப்பட்டதும், உலகில் ஏதாவதொரு

Tuesday, December 29, 2015

மனித செயல்களுடன் தக்தீரின் தொடர்பு

தக்தீர் என்பதன் பொருள் பொது மக்கள் கருதுகின்ற, தத்துவவாதிகள் நம்பிக் கொண்டிருக்கின்ற அதே பொருள் அல்ல என்பது இதுவரை கூறியதிலிருந்து தெரிய வருகிறது. அதாவது எதைச் செய்தாலும் அது மனிதன் செய்வதுதான் என்பதோ அல்லது செய்வதெல்லாம் இறைவன் செய்ய வைப்பவைதான்; நமக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்பதோ தக்தீர் (இறை நியதி) ஆகாது. மாறாக, தக்தீர் என்பது இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு வழியாகும். அதுதான் சரியானதும், இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்றதுமாகும். இப்போது தக்தீருக்கும் மனித செயல்களுக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றி சிறிது விளக்கமாகக் கூறுகிறேன்.

முதலில் கூறியுள்ளதைப் போன்று, தக்தீர் பலவகைப்படும் என்பதை நன்றாக

Monday, December 28, 2015

காரணிகளின்றி வெளியாகும் சிறப்பு விதி

காரணிகளுடன் கூடிய சிறப்பு விதியைத் தவிர காரணிகள் இல்லாமலேயே வெளிப்படக் கூடிய இன்னொரு சிறப்பு விதியம் உண்டு. அதுவும் இருவகைப்படும்.

1. உண்மையில் இவை காரணிகளின்றியே வெளியாகின்றனவென்றாலும் ஒரு குறிப்பிட்ட தத்துவத்தின் அடிப்படையில் அல்லாஹ் அத்துடன் காரணிகளையும் இணைத்துவிடுகின்றான்.

ஹஸ்ரத் முன்னறிவிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு வந்த

Wednesday, December 23, 2015

விதியுடன் மறைவான காரணிகள்

தக்தீர் வெளியாவதற்கான இன்னொரு வழிமுறை என்னவென்றால், அதற்காக (விதி வெளிப்படுவதற்காக) காரணிகள் தோற்றுவிக்கப்படுகின்றன என்றாலும் அவை மறைவானவையாக இருக்கின்றன. இறைவன் கூறாதவரை அல்லது மிக நுட்பமாக கவனிக்காதவரை அவை புலனாவதில்லை. எனவேதான், அவை காரணிகளின்றியே வெளிப்பட்டன என நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் அவை காரணப்பொருள்களின் துணை கொண்டே வெளியாகின்றன.

உதாரணமாக, ஒருவர் தமது விரோதிக்கு எல்லாவிதமான தொல்லைகளும் கொடுக்க முயற்சி செய்து வருகிறார். தான் விரும்பினால் கொலை

Sunday, December 20, 2015

விதியின் வெளிப்பாடு

தக்தீர் எத்தனை வகை என்பதை அறிந்த பின்னர், சிறப்பான தக்தீர் வெளிப்படுவதற்கு மூலகாரணங்கள் உள்ளன என்பதை அறிவது அவசியம், இதனைப் புரிந்து கொள்ளாத காரணத்தினால்தான், நாம் செய்வதெல்லாம் இறைவன் செய்ய வைப்பதுதான் என்று சிலர் கூறத் தொடங்கி விட்டனர். இறைவன் ஒருவரை வலுக்கட்டாயமாக ஒன்றைச் செய்ய வைப்பதில்லை என்பதை அவர்கள் உணர்வதில்லை. இறைவனின் சிறப்பான விதிகள் இறங்குவதற்கு குறிப்பிட்ட விதிமுறைகள் உள்ளன. இந்த ஏமாற்றம் உண்மையில் கர்வத்தினால் ஏற்பட்டதாகும். அப்படிப்பட்டவர்கள், நாமும் சிறப்பானவர்கள்தாம். நம்மையும் இறைவன் வேலை செய்ய வைக்கிறான்

Friday, December 18, 2015

தக்தீரின் வகைகள்

விதி பிரச்னையை விரிவாக எடுத்துக் கூறுமுன் இன்னொன்றையும் கூற விரும்புகின்றேன். அதாவது தக்தீர் பல வகைகளில் இருக்கிறது. அவற்றில் நான்கு வகையை மட்டும் கூறுகிறேன்.

இவை சாதாரண மக்களோடு தொடர்புடையவையாக இருப்பதால் மக்கள் அவற்றைப் புரிந்து கொள்ளமுடியும். மேலும் அவற்றைப் புரிய வைக்கவும் முடியும்.

அவற்றில் ஒன்றுக்கு ‘தக்தீரே ஆம் தப்யீ’ என்று நான் பெயர் வைக்கிறேன்.

ஒவ்வொரு செயலையும் இறைவன் செய்ய வைக்கிறானா?

இந்த விதி விவகாரத்தால் என்ன பயன்? என்று அவர்கள் சிந்தித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனை சிந்திக்கவில்லை. பயன் பெறுவதற்குப் பதிலாக நஷ்டமடையும் விதத்தில் அவர்கள் இந்த விவகாரத்தை ஏற்றுக் கொண்டனர். அவர்கள் கூறுகின்ற வகையில் எவரெல்லாம் ஏற்றுக் கொள்வாரோ அவரெல்லாம் நஷ்டமே அடைவார்.

உதாரணமாக அவர்களில் ஒரு பிரிவினர், மனிதன் செய்வதெல்லாம் இறைவன் செய்ய வைப்பதுதான் என்கின்றனர். இப்போது நாம் கேட்கிறோம்: இது சரியென்றால், ஒரு புறம் இறைவனே தீமையிலும் தீமையான

விதி விவகாரத்தின் மீது சொல்லளவில் நம்பிக்கை கொள்வது போதாது.

இது குறித்து நான் விளக்கப் போகுமுன் ஒன்றைக் குறிப்பிடுவது அவசியமென கருதுகிறேன். முஸ்லிம்கள் ‘விதி விவகாரத்தில்’ அதிகமாக ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். வெறும் விதியின் மீது நம்பிக்கை கொண்டால் மட்டும் போதும் என்று நினைத்துவிட்டார்கள். ஆனால் உண்மையில் அதனைப் புரிவதும், அறிவதும் மிக அவசியம். ஏனெனில் இறைவன் அதனை ஈமானின் ஒரு நிபந்தனையாகக் குறிப்பிடுள்ளான். நம்பிக்கை கொள்வதற்கு அது கட்டாய விதியாக இருப்பதால், அது நமக்கு பயனுள்ளது என்பதும் தெரிய வருகிறது. இல்லையாயின் அதன் மீது நம்பிக்கை கொள்வது கட்டாயமாக்கப்பட்டிருக்காது. 

Thursday, December 17, 2015

தவறான பெயரின் காரணமாக ஏமாற்றம்.

நான் ஆராய்ந்தவரை அவர்கள் இந்த விவகாரத்திற்கு தவறான பெயர் வைத்துள்ளனர். எனவே விதி பற்றிய விவகாரத்தில் சிக்கலும் குளறுபடியும் ஏற்பட்டு விட்டது. தவறான பெயர் வைப்பதனால் ஏமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. இவ்வாறு பலமுறை நிகழ்ந்துள்ளது.

உதாரணமாக, ஒருவர் நல்லடியார் என்று பெயர்பெற்று, அந்த நல்லடியார் மிகவும் தீய வேலையைச் செய்தார் என்று கூறப்பட்டால், கேட்பவர் இவர் என்ன கூறுகிறார்? என்று ஆச்சர்யப்படுவார். ஒருபுறம் இவர் அவரை

Wednesday, December 16, 2015

சூபிகளின் (இறைஞானிகளின்) கூற்று

இல்ம் (இறையறிவு) மற்றும் கத்ர் (இறை வல்லமை) இவ்விரண்டையும் புரிந்து கொள்ளாத காரணத்தால் இன்றைய சூபிகளிடம் பல வினோதமான எண்ணங்கள் பரவியுள்ளன. சில குறிப்பிட்ட வாக்கியங்களே இன்றைய சூபிகளின் வாயிலிருந்து வெளியாகின்றன. அவை இறை வணக்கத்தின் குறிப்பிட்ட அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. அவற்றின் மூலமாக அறிவற்றவர்களை அவர்கள் பயமுறுத்துகின்றனர். அறிவுள்ள மனிதர் அவர்களின் பிடியில் சிக்கமாட்டார். இதுபற்றி நான் எனது சொந்த அனுபவம் ஒன்றைக் கூறுகிறேன். இது ஒரு நகைச்சுவையை விட குறைந்ததல்ல.

Monday, December 14, 2015

தீமை செய்வதிலிருந்து இறைவன் ஏன் தடுப்பதில்லை?


இந்த மனிதர் இந்த நேரத்தில் இந்த தீயவேலையை செய்வார் என்று இறைவனுக்குத் தெரிந்திருக்கும்போது அவன் ஏன் அந்த மனிதரைத் தடுப்பதில்லை? என்ற கேள்வி இங்கு எழுகிறது.

உதாரணமாக, இந்த மனிதர் திருடுவார் என்பது இறைவனுக்குத் தெரிந்திருக்கிறது என்றால், திருடுவதிலிருந்து அவரை அவன் ஏன் தடுப்பதில்லை?

சுந்தர் சிங் என்ற கொள்ளையடிப்பவர் ஒருவர் நம்மிடம் வந்து, நான் இந்த