நபித்துவத்தின் உண்மைக்கு முன்னறிவிப்புகளுடன் அதிக தொடர்பு உண்டு. மேலும் முன்னறிவிப்புகள் நீங்குவதனால் நபிமார்களின் எதிரிகளும் கூச்சலிடக் கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது. மேலும் முன்னறிவிப்புகள் என்பது தக்தீர் என்ற விவகாரத்தின் ஒரு கிளையாகும். எனவே தக்தீருக்கும் முன்னறிவிப்புகளுக்கும் என்ன தொடர்பு என்பதையும் நான் எடுத்துக் கூறி விடுகின்றேன்.
முன்னறிவிப்புகள் இரண்டு வகையாக உள்ளன. ஒன்று இறை ஞானத்தை வெளிப்படுத்துவது; இன்னொன்று இறை வல்லமையை வெளிப்படுத்துவது. தக்தீரின் இவ்விரு அம்சங்களையும் புரிந்து கொள்ளாத காரணத்தாலேயே