அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Saturday, December 12, 2015

விதியைப் பற்றிய முஸ்லிம்களின் தவறான கொள்கைக்கு அடிப்படை


ஆக, இது ஒரு குழப்பத்தை ஏற்ப்படுத்தும் முறையாகும். இதனையே ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆனால் முஸ்லிம்கள் தடை செய்ததை கவனத்திற்கொள்ளாது மாபெரும் தடுமாற்றங்களை அவர்கள் அடைந்தனர். அவர்களில் சிலரோ தம் கொள்கைகளுக்கு யூனானி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டார்கள். சிலர் இந்தயாவிலுள்ள தத்துவவாதிகளின் கொள்கையை அதாவது, ‘வஹ்ததுல் வுஜூத்’ எனும் அத்வைதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டார்கள். இன்னும் சிலர் நாத்திகக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டார்கள். இந்தியாவில் வஹ்ததுல் வுஜூத் எனும் அத்வைதக் கொள்கை மிகப் பரவலாகக்

காணப்பட்டது. இதற்கும் விதிக்கும் இடையே எந்தவொரு வேறுபாடும் இருப்பதாகக் கருதப்படவில்லை. அதனையே ‘விதி’ என்று கூறப்பட்டுவிட்டது. தம் கொள்கைக்கு இதனை அடிப்படையாக வைத்து நாம் செய்வதெல்லாம் இறைவனே செய்ய வைக்கிறான்; இறையடியானுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என கருதப்பட்டது. அடியான் அடியானே அல்ல; மாறாக இறைவனாவான் எனக் கூறத் தலைப்பட்டுவிட்டனர்.

இதற்க்கு மாற்றமாக, இன்னொரு பிரிவினரோ, மனிதன் செய்யும் செயலில் இறைவனுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. எல்லாம் மனிதனுடைய அதிகாரத்திற்குட்பட்டதுதான் எனக் கூறினார். இந்தக் கொள்கைக்கு அடிப்படை யூனானி தத்துவமாகும். முஸ்லிம்கள் விதி பற்றிய தனது கொள்கைக்கு இந்த இரண்டு தத்துவங்களையே அடிப்படையாக கொண்டார்கள். உண்மைக்குப் புறம்பான இந்த கொள்கைகளை திருக்குர்ஆனின் மூலம் உறுதிப்படுத்த அவர்கள் விரும்பினார்கள். நமது நடத்தல், சுற்றித் திரிதல், எழுதல், உட்காருதல், சாப்பிடுதல், குடித்தல், திருடுதல், கற்பழித்தல், சூறையாடுதல், கொள்ளையடித்தல் இவையனைத்தும் இறைவனுடைய செயல்தான்; நமது செயலல்ல எனக் கூறுபவர்கள் திருக்குர்ஆனில் இருந்து இதுவே நிரூபணமாகிறது என்று கூறுகின்றனர்.

மேலும் பாராளுமன்ற ஆட்சியில் உள்ள அரசனுக்கு இருக்கும் உரிமை கூட இறைவனுக்கு நமது செயல்களில் உரிமை இல்லை. ஏனெனில் அந்த மன்னராவது சட்டங்களின் மீது கையெழுத்திடுகிறார். ஆனால் இறைவன் இந்த அளவு கூட செய்வதில்லை. உலகின் நடைமுறைகளில் எந்தவித தொடர்பும் இல்லாத ஒருவன்தான் இறைவன் என்று கூறுகின்ற இவர்களும் இது திருக்குர்ஆனிலிருந்து நிரூபணமாகிறது என்றே கூறுகின்றனர்: ஆனால் உண்மையில் இரண்டும் தவறானவையாகும்.

திருக்குர்ஆன் இவ்விஷயங்களை ரத்து செய்கிறது:

மனிதன் எதையெல்லாம் செய்கிறானோ அது மனிதன் செய்வதல்ல; மாறாக, இறைவனே செய்கிறான் என்று கூறுவதும் நாம் எதையெல்லாம் செய்கின்றோமோ அது நாமே செய்வதுதான்; அதில் இறைவனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறுவதும் அறிவால் ஒரு நிமிடத்திற்குக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத போதனையாகும்.

இவ்விரண்டில் ஒரு போதனையாவது அது திருக்குர்ஆனில் காணப்படுகிறது என திருக்குர்ஆனைப் படிக்கும் எவராவது நினைப்பாராயின் அது ஒரு மூடத்தனமானதாகும். தக்தீர் பற்றி திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்பதைக் கண்டறியும் நோக்கத்துடன், திருக்குர்ஆனில் 'அல்ஹம்து லில்லாஹ்' வின் அலிப் என்பதிலிருந்து 'வன்னாஸ்' என்பதன் (கடைசி எழுத்தான) 'சீன்' வரை நான் படித்தேன். ஆனால் அல்ஹம்து என்பதன் (முதல் எழுத்தான) 'அலிப்' என்பதிலிருந்து வன்னாஸ் என்பதன் (கடைசி எழுத்தான) 'சீன்' வரையுள்ள ஒவ்வொரு சொல்லும் மேற்கண்ட இரண்டு கூற்றையும் மறுக்கிறது என்ற உறுதியான முடிவுக்கு நான் வந்துள்ளேன். திருக்குர்ஆனைப் படிக்கும் பிறரும் இதே முடிவுக்குத்தான் வருவார்கள். மேலும் திருக்குர்ஆன் இவற்றை எவ்வாறு ஆகுமானதாக ஆக்கியிருக்கும்? ஏனெனில் இவையிரண்டும் தவறானது மட்டுமல்லாமல், ஒழுக்கத்தை கொலை செய்யக் கூடியதும் ஆன்மீகத்தை அளிக்கக் கூடியதுமாகும். இஸ்லாம் இந்த விவகாரம் தொடர்பாக எத்தகைய போதனைகளை வழங்கியிருக்கிறதென்றால் அதை ஒருவர் புரிந்து கொண்டால் அவர் இறை நெருக்கத்தையுடையவராக - ஏன் - மாபெரும் இறை நெருக்கத்தையுடையவராக ஆகலாம்.

எந்தவோர் அறிவும், எந்தவொரு தத்துவ வாதமும் அது குறித்து ஆட்சேபிக்க முடியாத அளவுக்கு இஸ்லாம் விதி பற்றி தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் அது மிகவும் பயனுள்ள போதனையாகும்.

1. தக்தீர் (விதி) என்பது அவர்கள் செய்வதையெல்லாம் இறைவனே செய்ய வைக்கிறான் என சிலர் கூறுகின்றனர். உதாரணமாக, துப்புதல், சிறுநீர் கழித்தல் போன்ற காரியங்களில் இறைவனுக்கு என்ன தொடர்பு? இவற்றில் இறைவனுக்கு தொடர்பு இருக்கிறது என்று நம்புவது இறைவனுக்கு இழுக்காகும் என்று கூறுகின்றனர். இவ்விரு பிரிவினரும் தமது கருத்துகளுக்கு திருக்குர்ஆனின் எந்தெந்த வசனங்களை அடிப்படையாகக் கொண்டார்களோ அவற்றில் சிலவற்றைப் பற்றி இப்போது நான் கூறுகிறேன். அப்போதுதான் இவர்களின் அடிப்படை எவ்வளவு பலகீனமானது என்பதை உங்களால் புரிந்து கொள்ளமுடியும்.