சுருக்கமாக, இறை நியதியின் மீது ஈமான் கொள்ளுதல் மிக முக்கியமான விஷயமாகும். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(லா யுவ்மினு அப்துன் ஹத்தா யுமின பில் கத்ரி ஹைரிஹி வ ஷர்ரிஹி)
அதாவது, நான்மை தீமைகள் பற்றிய இறை நியதியின் மீது நம்பிக்கை கொள்ளாதவரை எந்தவொரு அடியாரும் நம்பிக்கையாளராக இருக்க முடியாது. மேலும் கூறினார்கள்:
(மன் லம் யுமின் பில் கத்ரி ஹைரிஹி வ ஷர்ரிஹி ப அநா பரியும் மின்ஹு)
பொருள்: எவர் நன்மை தீமைகளின் நியதியின்மீது ஈமான் கொள்வதில்லையோ அவரை விட்டும் நான் விலகியிருக்கிறேன்.
ஆக, இறைநியதிக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே ‘விதி’ யின் விவகாரம் ஒரு முக்கியமான விவகாரம் ஆகும். நம்பிக்கை கொண்டவர்களுடன் தமக்கு இடம் கிடைக்க வேண்டும் என்று விரும்புபவருக்கு தக்தீரின் மீது நம்பிக்கை கொள்வது மிக அவசியம். ஒருவர் தம்மை முஸ்லிம் என்று வாதித்து தக்தீரின் மீது நம்பிக்கை கொள்ள வில்லையாயின் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் போதனைகளின்படி அவர் முஸ்லிமாக மாட்டார். ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் சேவகர்கள் மற்றும் அன்னாரைப் பின்பற்றுபவர்களுக்குப் பெயர்தான் முஸ்லிம். எனவே யார் முஸ்லிம், யார் முஸ்லிம் அல்ல என்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடத்திளிருந்தே தீரப்பு வேண்டப்படும். ஆகவே இறை நியதியின் மீது நம்பிக்கை கொள்ளாதவர் முஸ்லிம் ஆக முடியாது. ஏனென்றால் இறைநியதியின் மீது நம்பிக்கை கொள்ளாதவரை எந்தவொரு மனிதரும் முஸ்லிமாக மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.