அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Sunday, December 13, 2015

தலைவிதி பற்றி மக்கள் தவறாகப் புரிந்த நான்காவது வசனமும் அதன் உண்மை பொருளும்


நான்காவது வசனத்தின் சரியான

இவ்வாறே (விதிக்கு சான்றாக அவர்கள்) இந்த வசனத்தையும் எடுத்து வைக்கிறார்கள்:

மேலும் மூஸா கூறினார்: எங்கள் இறைவா! நீ பிர்அவ்னுக்கும் அவனுடைய சமுதாயத் தலைவர்களுக்கும் அவர்கள் மக்களை வழி கெடுக்க வேண்டும் என்பதற்காக உலக வாழ்க்கையில் அலங்காரத்தையும் செல்வங்களையும் வழங்கியுள்ளாய். (10:89)


இந்த வசனத்திலும் மக்களை வழிகெடுப்பதற்காக அவர்களுக்கு செல்வங்கள் கொடுக்கப்பட்டன என்பது பொருளல்ல. மாறாக, சென்ற வசனங்களைப் பற்றி நான் கூறி வந்துள்ளதைப் போன்று இங்கும் லாம் என்பது லாமுல் ஆகிபா (விளைவைத் தெரிவிக்கக் கூடிய லாம்) ஆகும். அதாவது, மக்களை வழிகெடுக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களுக்கு செல்வங்களை வழங்கவில்லை, எனினும் அவர்கள் அப்படியே செய்கிறார்கள்.

ஐந்தாவது வசனத்தின் சரியான பொருள்.

பின்னர் அவர்கள் கூறுகின்றார்கள். ஒரு வசனம் (விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்ற) எங்களது கூற்றை முற்றிலும் தெளிவாக்கிவிட்டது. அது வருமாறு:

“நீங்கள் எங்கிருந்தாலும் – வலிமை வாய்ந்த கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே – மரணம் வந்து உங்களைப் பிடித்துக் கொள்ளும் (மேற்கூறப்பட்ட) அவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால், இது அல்லாஹ்விடமிருந்து வந்ததென்று கூறுகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் தீமை ஏற்பட்டால் இது உம்மிடமிருந்து (நபி (ஸல்) அவர்களிடமிருந்து) வந்ததென்று கூறுகின்றனர். எல்லாமே, அல்லாஹ்விடமிருந்து வந்தவை என்று நீர் கூறுவீராக. இந்த விஷயத்தைக் கூட இவர்கள் புரிந்து கொள்ளவில்லையே! இவர்களுக்கு என்ன நேர்ந்தது?” (4:79)

பாருங்கள், நன்மை தீமை எல்லாமே இறைவன் புறமிருந்து வருகின்றன என்பது இந்த வசனத்திலிருந்து தெரிகிறது என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், ஒவ்வொரு செயலும் – அது நல்லதாயினும், தீயதாயினும் – விளைவு அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றன என்பதை அவர்கள் புரியவில்லை.

ஒவ்வொரு செயலின் நற்கூலியோ, தண்டனையோ இறைவன் புறமிருந்தே கிடைக்கின்றன என்பதை யார் மறுக்கிறார்கள்? அப்படியே நன்மையையும் தீமையும் இறைவன் புறமிருந்தே வருகின்றன என ஏற்றுக் கொண்டாலும், அதில் எவ்வித குற்றமும் இல்லை. உண்மை என்ன வென்றால் சில நேரங்களில் தொழிலாளியின் செயலும் முதலாளியின் செயலாகவே கருதப்படுகிறது. அச்செயலைப் பற்றிய நோக்கம் முதலாளிக்கு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரியே. உதாரணமாக ஓர் முதலாளியின் தொழிலாளி ஒருவருக்கு துன்பம் இழைத்தால் தன் தொழிலாளி பிறருக்கு துன்பம் கொடுக்க வேண்டும் என்பது முதலாளியின் நோக்கம் இல்லை என்றாலும் உங்களால் எங்களுக்கு துன்பம் வந்தது என்று நாம் சில நேரத்தில் முதலாளியைப் பார்த்துக் கூறிவிடுகிறோம். இவ்விதமாக தொழிலாளியின் துன்பம் இழைக்கும் செயலை முதலாளியின் செயலாக கூறிவிடுகிறோம்.

இந்த விதிமுறைப்படி இந்த வசனத்திற்கும் பொருள் கொடுப்போமேயாயின் எந்த பொருட்களை தவறாக பயன்படுத்துவதன் காரணமாக பாவங்கள் ஏற்படுகின்றனவோ அப்பொருட்கள் இறைவனால் படைக்கப்பட்டவையாகும். எனவேதான் இறைவனைக் குறித்து நன்மையையும் தீமையும் அவன் புறமிருந்தே வருகின்றன என கூறப்பட்டது என்று பொருள்படும். இவ்விதமாக பொருள் கொள்வதால் செயல்களில் பலவந்தம் உண்டு என நிரூபணமாகாது. இறைவன் வலுக்கட்டாயமாகப் பிடித்து தீமையை செய்ய வைக்கிறான் என்ற முடிவுக்கு ஒருபோதும் நாம் வரவேண்டியதில்லை. மாறாக, இறைவன் மனிதனிடத்தில் சில ஆற்றல்களை படைத்துள்ளான்: அவற்றை தவறாகப் பயன்படுத்தி மனிதன், திருட்டு, கற்பழிப்பு ஆகியவற்றைச் செய்கிறான் என்றே பொருள் கொள்ளவேண்டும்.

இந்த வசனத்திற்கு நான் முன்னர் கூறிய அதே பொருள்தால். அதாவது, இங்கு செயல்கள் பற்றி குறிப்பிடவில்லை. இன்ப, துன்பங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் இறைவன் நயவஞ்சகர்களிடம், நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை வந்தடையும் என்று கூறுகிறான். அதாவது உங்களின் தீய செயல்களின் காரணமாக உங்களுக்காக அழிவின் தண்டனையை இறைவன் ஏற்படுத்தியுள்ளான். இப்போது இது தீர்மானிக்கப்பட்டுவிட்டதால், நீங்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

பின்னர் கூறுகிறான், நன்மை இறைவன் புறமிருந்தும் தீமை உம்மிடமிருந்தும் வருவதாக இவர்கள் கூறுகின்றனர். இது இவர்களின் அறிவீனமாகும். நற்கூலி, தண்டனை கொடுப்பதில் உமக்கு என்ன தொடர்பு இருக்கிறது? இன்பமும் துன்பமும் செயலின் விளைவுகள் என்ற முறையில் அல்லாஹ்வின் புறமிருந்து வருகின்றன. அதாவது இன்னாருக்கு இன்ன செயலின் விளைவாக இன்ன நன்மை அல்லது இன்ன தீமை ஏற்பட வேண்டும் என்பதை அல்லாஹ் தீர்மானிக்கின்றான். இதில் உமக்கு என்ன தொடர்பிருக்கிறது? இது இறைவனுடைய வல்லமையாகும். இதனை அவன் எந்த அடியாருக்கும் கொடுக்கவில்லை. எனவேதான், இவர்கள் இந்த சிறு விஷயத்தைக் கூட புரிந்து கொள்ளவில்லையே. இவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று இறைவன் கூறுகிறான். அடுத்த வசனத்திலேயே இதனை மேலும் விளக்கிக் கூறுகிறான்:

ஏதேனும் நன்மை உமக்குக் கிடைத்தால் அது அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. மேலும் ஏதேனும் தீமை உமக்குக் கிடைத்தால் அது உம்மிடமிருந்தே. (4:80)

இப்போது, எல்லா செயல்களும் இறைவன் புறமிருந்தே உருவாகின்றன என்ற முதல் வசனத்திற்குப் பொருள் கொண்டால், இந்த வசனத்திற்கு எந்த பொருளும் கொள்ளமுடியாது. நான் கொடுத்த பொருளையே முதல் வசனத்திற்குக் கொடுத்தால்தான் இந்த வசனத்திற்கு அர்த்தம் ஏற்பட முடியும். இந்த விதத்தில் பார்க்கும்போது இரண்டாவது வசனம் இவ்வாறு பொருள்படும்:

நல்ல பிரதிபலன் இறைவன் புறமிருந்தாகும். ஏனெனில் நன்மையைப் பற்றிய தூண்டுதல் அவன் புறமிருந்தே வருகிறது. துன்பம் ஏற்பட்டால் அது மனிதன் புறமிருந்து ஏற்படுவதாகும். ஏனென்றால் தீமை தவற்றினால் ஏற்படும் விளைவாகும். மேலும் தவறு பற்றிய தூண்டுதல் அல்லாஹ்வின் புறமிருந்து ஏற்பட வாய்ப்பில்லை.

ஆறாவது வசனத்தின் சரியான பொருள்

மேலும் (விதிப்படியே எல்லாம் நடக்கும் என வாதிடும்) அவர்கள் கூறுவதாவது, இன்னொரு வசனம் பொருளை மிகவும் தெளிவுபடுத்தி விட்டது. அது வருமாறு:

நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்தாலும் இவர்களைப் பற்றி கொலையுண்டு போக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதோ அவர்கள், தாம் கொலையுண்டு கிடக்க வேண்டிய இடங்களை நோக்கிக் கட்டாயம் வெளியேறியிருப்பார்கள். (3:155)

எல்லாம் இறைவனே செய்கிறான் என்பது இதிலிருந்து தெளிவாகிறது (என்கின்றனர்)

இதற்குரிய விடையாவது, முதலில் முந்தைய வசனங்களைப்பற்றி நான் ஏற்கவனவே கூறியிருப்பதைப் போன்று இங்கும் செயலின் விளைவைப் பற்றித்தான் கூறப்பட்டுள்ளது: செயலைக் குறித்துக் கூறப்படவில்லை. இந்த வசனம் உஹது போர் பற்றியதாகும். இந்தப் போரில் நயவஞ்சகர்கள் ஆரம்பத்தில் போர்செய்வதற்காக முஸ்லிம்களுடன் வெளியேறினார்கள். ஆனால் ஆயிரம் பேர்களில் முந்நூறு பேர்கள் போருக்கான தகுந்த நேரத்தில் திரும்பி வந்துவிட்டார்கள். இவ்வாறு அவர்கள், நாம் முஸ்லிம்களை ஏமாற்றி போரில் சிக்க வைத்து விட்டு வந்து விட்டோம் என தாமாக கருதினார்கள். எதிரிகளின் முன் சென்று திரும்பி விடுதல் கடினமான விளைவை ஏற்ப்படுத்துவதாகும். மேலும் போருக்குப் பிறகு, நீங்கள் தேவையில்லாமல் தம்மைத் தாமே அபாயத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் எனக் கூறி அந்நயவஞ்சகர்கள் முஸ்லிம்களை கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள். இதற்கு விடையாகவே இறைவன் கூறுகிறான்: மூடர்களே! நாம் முஸ்லிம்களுடன் சென்று அவர்களை சிக்க வைத்து விட்டு வந்துவிட்டோம். நம் உதவியின் மீது நம்பிக்கை வைத்துதான் இவர்கள் (முஸ்லிம்கள்) போரிடச் சென்றார்கள் எனக் கருதுகின்றீர்கள் என்றால், நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள், நீங்கள் பாதுகாப்பான கோட்டைகளில் இருந்தாலும் – அதாவது மதீனா போன்ற பாதுகாப்பற்ற இடம் ஒருபுறமிருக்கட்டும் – கோட்டைகளில் பாதுகாப்பு இருந்தாலும் கூட இவர்களின் மீது போர் செய்வது கடமையாக்கபடுள்ளதோ அவர்கள் நிராகரிப்போரை எதிர்த்துப் போரிட பயப்படுவதில்லை. வெளிய சென்று எதிரிகளுடன் கண்டிப்பாகப் போரிடுவார்கள்.

ஆகவே இங்கு கூறப்பட்டுள்ள ‘கு(த்)திப’ என்பதற்கு விதிக்கப்பட்டுள்ளது என்று பொருளாகாது. மாறாக கடமையாக்கப்பட்டுள்ளது என்று பொருள்படும்.

‘கு(த்)திப’ அலைக்குமு ஸ்ஸியாமு’ (நோன்பு உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது) என்பதிலும் இதே பொருளைத்தான் கொடுக்கிறோம். மேலும் ‘அல்கத்ல்’ (தலைவிதிப்படி) கொலையுண்டு போதல் என்று பொருளல்ல; மாறாக கொலை செய்தல் என்று பொருளாகும். இந்த பொருளில் இந்த சொல் குர்ஆனில் பல இடங்களில் வந்துள்ளது. உதாரணமாக,

(அல் பித்னது அஷத்து மினல் கத்ல்) கலகம், கொலை செய்வதை விட மிகவும் கொடியது (2:192)

(பலாயுஸ்ரிப், பில்கத்ல்) கொல்லப்பட்டவரின் வாரிசான அவர் (கொலை செய்தவரைக்) கொன்று விடுவதில் எல்லையைக் கடந்துவிடக் கூடாது (17:34) மற்றும் (இன்ன கத்லஹும் கான கித்அன் கபீரா) அவர்களை கொலை செய்வது நிச்சயமாக பெரும் குற்றமாகும். (17:32) ஆகியவை.

சுருக்கமாக, இந்த வசனத்தில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், நம்பிக்கையாளர் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்றுக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார்; ஒரு போதும் சோம்பேறித்தனம் காட்டமாட்டார். மதீனா நகரம் ஒன்றும் பாதுகாப்பான கோட்டையல்ல. முஸ்லிம்கள் வெளியில் செல்லாமலிருந்தாலும் நிராகரிப்பவர்கள் அங்கு வரமுடியும். கோட்டைகளில் பாதுகாப்பு இருந்தாலும் வெளியில் சென்று தாக்குதல் நடத்துமாறு முஸ்லிம்களுக்கு கட்டளையிடப்பட்டால் அப்போதும் கூட அவர்கள் அதனைத் தவறாகக் கருதமாட்டார்கள். ஆர்வத்துடன் தமது கடமையைச் செய்வார்கள். 

 
இறைவன் ஒன்றும் செய்வதில்லை என்ற கருத்திற்கு மறுப்பு

மேற்கூறப்பட்ட வசனங்களில், இறைவன் மனிதனை பலவந்தப்படுத்தி அதன் மூலம் எல்லா செயலையும் செய்ய வைக்கிறான் என்ற பொருள் எந்த வசனத்திலிருந்தும் புலனாவதில்லை. அவ்வாறு புலனாகதிருக்கும்போது, ஒவ்வொரு செயலையும் இறைவனே செய்ய வைக்கிறான் என்று அம்மக்கள் ஆதாரம் காட்டுவது முற்றிலும் தவறாகிவிட்டது.

மேலும் எவர்கள், இறைவன் ஒன்றும் செய்வதில்லை: அவனுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறுகிறார்களோ அவர்களின் கொள்கையும் தவறென திருக்குர்ஆனிலிருந்தே நிரூபணமாகிறது. உதாரணமாக இந்த வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இறைவன் கூறுகின்றான்.

நிச்சயமாக நானும் என் தூதர்களும் வெற்றி பெற்றே தீருவோம் என அல்லாஹ் விதித்துள்ளான். (திருக்குர்ஆன் 58:22)

இப்போது பாருங்கள். ஒரு நபி உலகத்தில் தோன்றும் போது அவருடைய நிலைமை உலகியலைப் பொறுத்தவரை மிகவும் பலவீனமாக இருக்கிறது. ஆனால் முழு உலகமும் அவருக்கு எதிராக உறுதியாக நின்றாலும் அவரை (அந்தபியை) வெற்றி கொள்ள முடியாது என இறைவன் கூறுகின்றான். இன்று வரை அவ்வாறே நடந்து வருகிறது. உலகம் ஒருபோதும் இறைவனின் எந்தவொரு தூதரின் மீதும் வெற்றி கொள்ள முடிந்ததில்லை. இதில் இறைவனுக்கு தொடர்பு உண்டு: கண்டிப்பாக உண்டு என்பது இதிலிருந்து தெரிகிறது. இல்லையென்றால் உலகத்தால் இறைதூதர்களை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை? எனவே இவ்வுலக விஷயத்தில் இறைவனுக்கு யாதொரு தொடர்பும் இல்லை என்பது தவறு என நிரூபணமாகிவிட்டது.